தென்கலையார் அனுஸந்திக்கும்
ஸ்ரீ மணவாள மாமுனிகளை வணங்கும் தனியன்
|
|
தனியன்
|
பொருள்
|
ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்
|
திருவாய்மொழிப்பிள்ளையின் தயைக்கு பாத்திரமான
|
தீபக்த்யாதி குணார்ணவம்
|
ஞான, பக்தி வைராக்யாதி குணஙகளுக்குக் கடலான
|
யதீந்த்ர ப்ரவணம்
|
எம்பெருமானாரையே துதிக்கும் ப்ராவண்யமுடைய
|
வந்தே ரம்யஜாமாதரம் முனிம்
|
ஸ்ரீ மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்
|
|
இரு கலையாரும் அனுஸந்திக்கும்
நம் ஆசார்ய பரம்பரையை வணங்கும் தனியன்
|
ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது
|
|
தனியன்
|
பொருள்
|
ஸக்ஷ்மீநாத ஸமாரம்பாம்
|
லக்ஷ்மீ நாதனான ஸ்ரீமந் நாராயணனை ஆரம்பமாகவும்
|
நாத யாமுன மத்யமாம்
|
ஸ்ரீமன் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தாரை நடுவிலும்
|
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்
|
என்னுடைய ஆசார்யர் வரையிலும் உள்ள
|
வந்தே குரு பரம்பராம்
|
குரு பரம்பரையை வணங்குகின்றேன்.
|
|
பகவத் ராமானுஜரை வணங்கும் தனியன்
|
தனியன்
|
பொருள்
|
யோ நித்யம்
|
யாரொருவர் எப்போதும்
|
அச்சுத பதாம்புஜ யுக்ம
|
அழிவற்ற எம்பெருமானின் திருவடிகளாகிற
|
ருக்ம வ்யாமோஹத
|
பெரு நிதியின் மேலுள்ள அன்பினால்
|
ததிதராணி த்ருணாயமேனே
|
மற்ற விஷயங்களை துரும்பாக எண்ணினாரோ
|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய
|
அப்படிப்பட்ட என்னுடைய குருவும் பகவானுமாகிய
|
தயைக ஸிந்தோ ராமானுஜஸ்ய
|
கருணைக்கடலான ஸ்ரீ ராமானுஜருடைய
|
சரணௌ शரணம் ப்ரபத்யே
|
திருவடிகளை சரணமடைகிறேன்
|
|
ஸ்வாமி நம்மாழ்வாரை வணங்கும் தனியன்
|
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது
|
|
தனியன்
|
பொருள்
|
மாதா பிதா யுவதய :
தனயா விபூதி : ஸர்வம்
|
என் தாய், தந்தை, பெண்கள்,
புத்ரர்கள், செல்வம் எல்லாம் கொண்டு
|
யதேவ நியமேன மதன்வயானாம் ஆத்யஸ்ய ந : குலபதே :
|
என் ஸந்ததிகளுக்கு முதல்வரான ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தராகிய நம் குலபதியான
ஸ்வாமி நம்மாழ்வாரின்
|
வகுளாபிராமம்
|
மகிழம்பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட
|
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்னா
|
சோபையுடைய திருவடிகளின் முன் தலைவணங்குகிறேன்.
|
ஆழ்வார்களை வணங்கும் தனியன்
|
ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான்
அருளிச்செய்தது
|
|
தனியன்
|
பொருள்
|
பூதம்
|
பூதத்தாழ்வார்
|
ஸரश्ச
|
பொய்கையாழ்வார்
|
மஹதாஹ்வய
|
பேயாழ்வார்
|
பட்டநாத
|
பெரியாழ்வார்
|
ஸ்ரீ
|
ஆண்டாள்
|
பக்திஸார
|
திருமழிசையாழ்வார்
|
குலசேகர
|
குலசேகராழ்வார்
|
யோகி வாஹான்
|
திருப்பாணாழ்வார்
|
பக்தாங்க்ரிரேணு
|
தொண்டரடிப்பொடிகள்
|
பரகால
|
திருமங்கையாழ்வார்
|
யதீந்த்ர மிச்ரான்
|
யதிராஜராகிய ராமானுஜர்
|
ஸ்ரீமத் பராங்குசமுனிம்
|
நம்மாழ்வார்
|
ப்ரணதோஸ்மி நித்யம்
|
இவர்களை எப்பொழுதும் ஸேவிக்கிறேன்
|







ஶ்ரீ ஶ்ரீநிவாஸ மஹாதேசிகன் தனியன்.
ReplyDeleteஶ்ரீமத் பெரியாண்டவர்.
மாசி-புஷ்யம். ஶ்ரீரங்கேசபதே ஸமர்ப்பிதபரம் ச்ருத்யந்த ராமானுஜ ஶ்ரீயோகீந்த்ரகுருத்தமேந யமிந:ச்ருத்யந்த வித்யாத்மந: | ப்ராப்தச்ருத்யவதம்ஸயுக்மஹ்ருதயம் ஶ்ரீவாஸ ராமாநுஜாத் ஶ்ரீ ஶ்ரீவாஸமுதீந்த்ர தேசிகமணிம் ச்ரேயோநிதிம் ஸம்ச்ரயே |